செந்தில்பாலாஜி வழக்கு: இனியும் திமுக அரசு நீடிப்பது வெட்கக்கேடு, மானக்கேடு - பாஜக நாராயணன்!
BJP Narayanan Thirupathy Condemn to TNGovt DMK Senthilbalaji case
பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "செந்தில் பாலாஜி மீதான வழக்கில் 2200 க்கும் மேற்பட்ட நபர்களை லஞ்சம் கொடுத்ததற்காக குற்றம் சாட்டியுள்ளது திட்டமிட்ட ரீதியில் நடந்துள்ளது.
செந்தில் பாலாஜியின் வாழ்நாளில் இந்த வழக்கை முடிக்கக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் வழக்கில் இத்தனை பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்கி கொடுத்த தரகர்கள் யார்? வேலை கொடுக்க பரிந்துரைத்த/ நியமித்த அதிகாரிகள் யார்? தமிழக அரசு வேண்டுமென்றே இந்த வழக்கை தாமதப்படுத்துகிறது என்று உச்சநீதிமன்றம் இன்று குறிப்பிட்டுள்ளது.
இது திராவிட மாடல் திமுக அரசின் மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. இனியும் இந்த அரசு நீடிப்பது வெட்கக்கேடு, மானக்கேடு" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Condemn to TNGovt DMK Senthilbalaji case