கேட்கிறவன் கேனையனா இருந்தா... முதலவர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் குறித்து அதிரவைக்கும் டிவிட்! - Seithipunal
Seithipunal


புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், பல்வேறு தொழில் முதலீடு ஒப்பந்தங்களை போட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, 

Yield Engineering Systems நிறுவனத்துடன் 150 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 300 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
PayPal நிறுவனத்துடன் 1,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
Microchip நிறுவனத்துடன் 250 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 1500 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
ஓமியம் நிறுவனத்துடன் 400 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 500 பேருக்கு வேலைவாய்ப்பு.
GeakMinds நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நோக்கியா நிறுவனத்துடன் 450 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க" என்ற வரிகளும், 'முகமது பின் துக்ளக்' நாடகத்தில் 'சோ' அவர்கள் நான் அமெரிக்கா பார்க்க வேண்டாமா? என்று காட்சியும் தான் நினைவில் வருகிறது.

இந்த நிறுவனங்கள் அனைத்துமே தற்போதுதமிழகத்தில் இயங்கி வருகிற நிலையில், இதற்காக எதற்கு அமெரிக்கா சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று வியப்பாக இருக்கிறது. 

முதலீடுகளை ஈர்க்க போவதாக சொல்லிவிட்டு அங்கு இறங்கிய மறுநாளே முதலீடுகள் குவிந்தன என்று செய்தி வெளியிடுவது 'மக்கள் முட்டாள்கள்' என்ற எண்ணத்தை 'திராவிட மாடல்' கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. 

ஒரு நிறுவனம் தன் தொழிலை கட்டமைக்க பல கோடிகள் செலவு செய்த இடத்தில் தான், அதை விரிவாக்கம் செய்யவும் முயற்சிக்கும் என்பது சாதாரண பொது அறிவு. ஆனால், அந்த பொது அறிவு தமிழர்களிடத்தில் இல்லை என்று திராவிட மாடல் நினைப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

ஏதோ திரைப்படங்களில் காட்டக்கூடிய பிரம்மாண்டத்தை, கவர்ச்சியை காண்பித்தால் தமிழர்கள் மயங்கி விடுவார்கள் என்று திராவிட மாடல் எண்ணுவது நகைச்சுவை" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan say about CM MK Stalin US Trip


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->