ரம்ஜான், கிருஸ்துமஸ் கிருஸ்துவ இஸ்லாமிய பண்டிகை என்று சொல்வதற்கு உங்களுக்கு தைரியம் உள்ளதா? பாஜக கேள்வி! - Seithipunal
Seithipunal


திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து எழுதி உள்ள கடிதத்தில், "தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்ப ரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.

பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்.

தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளி விவரங்களும் தர வரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "அப்படியா? சரி! ஏதாவது ஒரு இஸ்லாமியரை 'சூரியனை வணங்குகிறோம்' என்று சொல்ல சொல்லுங்கள், நானும் பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதே போல் ரம்ஜான் இஸ்லாமிய பண்டிகை அல்ல என்றும் கிருஸ்துமஸ் கிருஸ்துவ பண்டிகை இல்லை என்றும் சொல்வதற்கு உங்களுக்கு தைரியம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan Condemn to DMK MK Stalin pongal hindu


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->