'தவெக தலைவர் விஜய் வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை'; நயினார் நாகேந்திரன்..! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய் அவர்கள் இன்று ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர், ''மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் காசு தான் துணை; எனக்கு என் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் 'மாஸ்' (மக்கள்) தான் துணை. நமக்கு துணையாக இருக்கும் ஈரோடு மக்களுக்காக குரல் கொடுக்க வந்து இருக்கிறேன் என்று பேசியிருந்தார். இதற்கு கூட்டத்தில் இருந்து பலத்த கரகோசத்துடன் மக்கள் வரவேற்பு கொடுத்தனர்.

இது குறித்து, வேலுாரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது: பொதுவெளியில் பேசும் போது அனைவரும் நாகரிகமாக பேச வேண்டும். தவெக தலைவர் விஜய் வெறும் மாஸ் காட்டி பிரயோஜனம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், திமுகவினர் பாஜவின் 'B' டீம் என்று தவெக தலைவர் விஜயை கூறுகின்றனர் என்று செய்தியாளர் கேள்வி கேட்டனர், அதற்கு ஒரு பொய்யை திரும்ப, திரும்ப சொல்லுவதால் அது அப்படியே நடந்துவிடும். கோயபல்ஸ் தத்துவத்தை பரப்புவதிலும் வதந்தியை பரப்புவதிலும் திமுகவினர் வல்லவர்கள். அவர்கள் அப்படித்தான் பரப்புவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செங்கோட்டையன் தவெகவில் சேருவதற்கு முன் அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் அங்கு போனார். அப்படி பார்த்தால் அவர்கள் திமுகவின் 'B' டீமா, இல்லை பாஜவின் 'B' டீமா என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP leader Nainar Nagendran says that Tamilaga Vetri Kazhagam leader Vijay gaining popularity alone is not enough


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->