அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சி.! 60 தொகுதிகளில் தனித்துப் போட்டி.? பொது செயலாளர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் ஆறு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சியும் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கட்சி பொறுப்பு மற்றும் நிர்வாகிகளையும் மாற்றம் செய்து வருகின்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றது. தற்போது வரும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடருமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, அதிமுகவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல், பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். மேலும் அதிமுக கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று திமுக காய்களை நகர்த்தி வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் பாஜக மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே டி ராகவன் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி தயாராக உள்ளது. தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்தால் கூட,  60 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்து உள்ளோம். 

அந்த 60 சட்டமன்ற தொகுதிகள் எவை என்பதை உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது. தற்போது அந்த 60 சட்டமன்ற தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி தேர்தல் பணிகளை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp kt raghavan press meet about assembly election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->