அரசியலில் அடுத்த பரபரப்பு! அண்ணாமலை இன்றி பாஜக நிர்வாகிகள் செய்த சம்பவம்!
BJP executives suddenly consulted without Annamalai
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் மத்திய பாஜக தலைமையின் அவசரம் அழைப்பை ஏற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்த அண்ணாமலை இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது மற்றும் அண்ணாமலை நடத்தி வரும் என் மண் என் மக்கள் நடை பயணத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெறுவதாக இருந்த தமிழக பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அண்ணாமலை இன்றி பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக இருக்கும் கேசவிநாயகம் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், வினோஜ் செல்வம், கார்த்தியாயினி, கருப்பு முருகானந்தம், பொன் பாலகணபதி, ஏ.பி முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து எங்கு நடத்துவது, எந்த தேதியில் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் டெல்லி முகாமில் உள்ள அண்ணாமலை இன்னும் தமிழகம் திரும்பாத நிலையில் தமிழக பாஜக நிர்வாகிகள் அவரின்றி ஆலோசனை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
BJP executives suddenly consulted without Annamalai