தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பாஜக வேட்பாளர் பட்டியல்? வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே வெளியிடப்படும் என நேற்று கோவையில் நடைபெற்ற பா.ஜ.க மையக் குழு கூட்டத்தில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கோவையில் நேற்று நடைபெற்ற பாஜக தமிழக மக்களவை தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மக்களவை தேர்தல் கோட்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் எந்தெந்த தொகுதிகளில் தேர்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பாஜகவினர் எந்த பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. 

குறிப்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என பி.எல். சந்தோஷ் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் பணிகளில் மேற்கொண்டு வருகிறார். அது போல் ஏராளமான வேட்பாளர்கள் அவரவர் தொகுதிகளில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP candidate list before election announcement


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->