பாஜகவுக்கு எதிரான கூட்டணி ஆட்சி தப்பிக்குமா? இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு.! - Seithipunal
Seithipunal


பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாா் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

முதலமைச்சர் நிதீஷ் குமாா், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றாா். ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

இதனை தொடர்ந்து, பிகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது அரசின் பெரும்பான்மையை முதலமைச்சர் நிதீஷ் குமாா் நிரூபிக்க உள்ளார். 

தற்போது பேரவைத் தலைவராக இருக்கும் பாஜகவை சோ்ந்த விஜய் குமாா் சின்ஹா, பதவி விலக மறுப்பதால் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விஜய் குமாா் சின்ஹா மீது நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்னர், ஆளும் கூட்டணி தரப்பில் பேரவைத் தலைவா் தோ்வு செய்யப்படுவாா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையில் ஆளும் கூட்டணிக்கு  164 எம்.எல்.ஏக்களின் ஆதரவும், பாஜகவுக்கு 77 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் உள்ளது. எனவே, நிதீஷ் குமாா் அரசு எளிதில் வெற்றி பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar anti BJP coalition government survive Confidence vote


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->