அதிமுகவில் ‘இலையுதிர் காலம்’ – இனிதான் மெயின் பிக்சர்! கூடாரம் காலி! அதிமுகவிலிருந்து பலர் வெளியேற முடிவு?
Autumn season in AIADMK Now is the main picture The tent is empty Have many decided to leave AIADMK
தமிழகத்தில் மழைக்காலம் ஓயாமல் பொழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுகவுக்குள் மட்டும் அரசியல் இலையுதிர் காலம் தொடங்கி விட்டது. ஒருவருக்கு பின் ஒருவர் கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்கள் காரணமாக, இரட்டை இலையின் பல கிளைகள் உதிர்ந்து, வேறு கட்சிகளின் பக்கம் பறந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
சமீபத்தில் முன்னாள் எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைந்தது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, முக்கிய முஸ்லிம் முகமாக இருந்த அன்வர் ராஜா திமுக பக்கம் நகர்ந்தார். அதேபோல் ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனும் திமுகவில் இணைந்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிமுகவில் அதிருப்தி அலை தொடர்ந்து பரவி வருகிறது.
இதற்கிடையில் மிகப் பெரிய அரசியல் அதிர்வலையாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென அதிமுகவிலிருந்து விலகி, எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். இது தவெக அமைப்புக்கு மிகப்பெரிய பலத்தையும், அதிமுகவுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் செங்கோட்டையனின் தாவல் இத்தொடரின் துவக்கமே என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் பேசி வருகிற மேலும் 4 தலைவர்கள் —ஒருவர் கொங்கு மண்டலத்தில்,ஒருவர் சென்னையில்,இருவர் டெல்டா மாவட்டங்களில் விரைவில் தவெகவில் இணையும் வாய்ப்பு அதிகம் என்றும், பேச்சுவார்த்தை இறுதி நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடம்பாக்கத்தில் ரோபோ சிட்டி அங்கங்களை அகற்றுவது போல,
“அதிமுக அமைப்பின் கிளைகளைக் ஒன்று ஒன்று பிரித்து, செங்கோட்டையன் விஜய் பக்கம் கூட்டிச் சென்று கொண்டிருக்கிறார்”
என்று அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இதையடுத்து, அதிமுகவில் உள்ள பல மூத்த தலைவர்கள் மனநிலையை கவனித்தால், அடுத்த வாரங்களில் சுடச் சுட அரசியல் திருப்பங்கள் நிகழ வாய்ப்புகள் அதிகம்.அதிமுக தலைமை அமைதியாக இருக்கும் போதிலும், வட்டாரங்களின் கூற்று —“இது டீசர் மாத்திரம்… மெயின் பிக்சர் இன்னும் ஆரம்பிக்கவில்லை!”
English Summary
Autumn season in AIADMK Now is the main picture The tent is empty Have many decided to leave AIADMK