கர்நாடக பாஜக அரசை கவிழ்க்க வேண்டும் - ஆதரவு கோரும் அரவிந்த் கேஜ்ரிவால்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று, டெல்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இன்று அரசியல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பெங்களூர் தேசிய கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த '40 சதவீத அரசாங்கத்தை' (கர்நாடக மாநில பாஜக அரசாங்கத்தின் மீது ஒப்பந்ததாரர்கள் சங்கம் கூறும் ஊழல் குற்றச்சாட்டை குறிப்பிடும் வகையில்) கவிழ்க்க விவசாயிகளும், விவசாய அமைப்புகள் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், இந்த அரசாங்கத்தின் 20 சதவீதம் மற்றும் 40 சதவீதம் கமிஷன் கணக்குகளை நாம் மூடவேண்டும். ஊழல் இல்லாத ஒரு அரசாங்கத்தை கர்நாடக மாநில மக்களுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் பல்வேறு இலவச சேவைகளை மக்களுக்கு வழங்க முடியுமென்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arvind Kejriwal Karnataka AAP


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->