அரியலூரில் வெடித்தது போராட்டம், போலீஸ் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது, இதனால் மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள்.

மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சென்னை சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி மற்றும் கோவை சுபஸ்ரீ உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது, அரியலூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த விக்னேஷ் என்ற மாணவன்மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் - தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் விக்னேஷ்(வயது 19) மகன்கள் உள்ளனர். விக்னேஷ் சிறுவயது முதலே டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவில் படித்துள்ளார். 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விக்னேஷ் நன்றாகப் படித்த அவர் 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1006 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன்பே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்ட அவர், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு எழுதி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 370 மதிப்பெண்களை விக்னேஷ் பெற்றார். அவருக்கு தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்தது. ஆனால், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கு தனியார் கல்லூரியில் சேர்க்க வசதி இல்லாததால், இந்த ஆண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்தார். நீட் தேர்வில் 500&க்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறியதால் கடுமையான மன உளைச்சலில் விக்னேஷ் இருந்து வந்தார். அதன் காரணமாக நேற்று அதிகாலை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.

மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்த விக்னேஷ் வருகின்ற 13 தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண் பெற்று டாக்டர் ஆக முடியுமா? என கடந்த 2 நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், அரியலூர் மாணவன்  விக்னேஷின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விக்னேஷின் குடும்பத்தினருக்கு ஆதரவாக பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் உத்தரவின் பேரில் பாமக நிர்வாகிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பாமகவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்னர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalur vignesh family and pmk protest


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal