#சற்றுமுன் : அண்ணாமலை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஈவேரா கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பினால் உயிரிழந்தார். இதன் காரணமாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியானது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான, வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக, தமிழக கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. 

அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக சார்பில் வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டார். முன்னாள் அதிமுக பிரமுகரான ஓபிஎஸ் தனது சார்பில் ஒரு வேட்பாளரை அறிமுகப்படுத்தி அதன் பின் அவை வாபஸ் பெற்றுக் கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஏற்கனவே நடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக ஒன்றிணைந்து சந்தித்த நிலையில் இந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் கூட்டாக பயணிக்குமா என்ற சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதில், "அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் வெற்றிக்கு பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் பாடுபட வேண்டும். தங்கள் வேட்பாளரை திருப்பி வாபஸ் பெற்றுக் கொண்ட ஓபிஎஸ்-க்கு நன்றி." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai statement about BJPs Stand Of Erode election


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->