இடைத்தேர்தலில் நாங்கள் யார் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் யார் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருநெல்வேலியில் இருந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இடைத்தேர்தல் பொருத்தவரை 80 சதவீதத்திற்கு மேல் ஆளும் கட்சியை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு காரணம் ஆணும் கட்சியின் பணபலம், படைபலம் மற்றும் அதிகாரிகளின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல்.

ஆனால் இடைத்தேர்தல் முடிந்து சில நாட்களிலேயே பொது தேர்தலில் அதே ஆளும் கட்சி தோல்வி அடைந்திருக்கும். ஏனென்றால் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் பணம் கொடுத்து வெற்றி பெறுவார்கள். 

நமது இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் அதற்கு இன்னும் பல நாட்கள் உள்ளது. இது ஒரு இடைத்தேர்தல் அவ்வளவுதான் அதனால் இது மக்களுக்கும் தெரியும் இந்த தேர்தலில் நாங்கள் யார் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai speech about erode by election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->