100 நாளில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி; அண்ணாமலை..! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சி இன்னும் 100 நாட்களில் தூக்கி எறியப்படும். இவ்வாறு ஆட்சி முடிவடைய உள்ளதால் திமுகவுக்கு பயம் உள்ளதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அவர், கடந்த சில நாட்களாக அரசு பஸ் விபத்துகளை சந்தித்து வருகிறது. அரசு பஸ்சை ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசு எல்லா அரசு பஸ்களை ஆய்வு செய்து தர சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், 10 15 ஆண்டுக்கு மேல் பஸ்கள் ஓடினால் அதற்கு சான்று இருக்கிறதா என பார்க்க வேண்டும் என்றும், தேர்தலுக்கு 03 மாதம் உள்ளது. தேஜ கூட்டணி எப்படி அமையும் என பொறுத்து இருந்து பார்ப்போம் ஓபிஎஸ், தினகரன் பிரேமலதா நல்ல முடிவு எடுப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், தேஜ கூட்டணி வலிமையாக தேர்தல் களத்தில் பெரும் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகளை பார்த்து கொண்டு இருக்கிறோம் என்றும், நேரம் இருக்கிறது பொறுமை காப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவை பொறுத்தவரை 100 நாட்கள் உள்ளதாகவும், இதனால் ,எஸ்ஐஆர் உள்ளிட்ட பயம் இருப்பது நியாயம் தான் என்று கூறியுள்ளதோடு, திமுக இன்னும் 100 நாட்கள் ஆட்சியில் இருப்பார்கள்.100 நாளில் இந்த ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அத்துடன், எல்லா கட்சிகளும் தலைவர்களும் மரியாதையாக நடத்தப்பட்ட ஆட்சியில் அமர்வது உறுதி என்றும், நாங்கள் மத அரசியல் எப்போதும் செய்யவில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai says it is certain that the DMK government will be overthrown in 100 days


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->