நயினார் நாகேந்திரன்-அதிமுக விவகாரம்.! பதறியடித்துக்கொண்டு அண்ணாமலை அளித்த பேட்டி.! - Seithipunal
Seithipunal


#Annamalai | #BJP | #AIADMK
தஞ்சாவூர் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசியபோது,

"சட்டமன்றத்தில் ஆளுமையோடு பேசக்கூடிய அதிமுகவை பார்க்க முடியவில்லை. நான்கு பேர் இருந்தாலும் சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினையை பாஜகதான் பேசுகிறது. அதிமுக எதிர்கட்சியாக இல்லை. எதிர்க்கட்சியாக இல்லாமல் இருந்தாலும் ஊடகங்களுக்கு துணிச்சலோடு பேட்டி அளிப்பவர் அண்ணாமலை மட்டுமே" என பேசி இருந்தார்.

நயினார் நாகேந்திரன் இந்த பேச்சு அதிமுக மத்தியில் சலசலப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கண்டனக் குரல்களும் எழுந்தது. 

இதனையடுத்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், "இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்" என விளக்கமளித்து இருந்தார்.

இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜவின் நிலைபாடு இல்லை என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்து உள்ளார்.

மேலும், இயற்கையான உறவில் அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த சலணமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் என்றும் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

annamalai say about admk bjp alliance jan


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->