இது வேற வாயி.. "அரசியலுக்காக" அண்ணாவை துக்கி பிடிக்கும் அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் "மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா 1956ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தமிழ் சங்க பொதுக்கூட்டத்தில் பகுத்தறிவு கருத்துக்களை பேசியதாகவும், அதற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கோபப்பட்டதாகவும் தெரிவித்தார். அண்ணா பேசியது பக்தர்கள் மனதை புண்படுத்திவிட்டது. வேண்டுமென்றால் தமிழ்ச்சங்க பொதுக்கூட்டத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுபோன்று பேசினால் மீனாட்சி அம்மனுக்கு ரத்த அபிஷேகம் நடக்கும் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கூறியதாகவும், உடனே அறிஞர் அண்ணா , பசும்பொன்னாரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அண்ணாமலை கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு தமிழக அரசியலில் வட்டாரத்தில்  பேசுபொருளாக மாறியது. அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக கடும் கண்டங்களை பதிவு செய்தது.மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அண்ணாமலை தற்போது அண்ணாவை தூக்கி பிடிக்க துவங்கியுள்ளார்.

அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் பாதயாத்திரை தற்போது வேலூர் மாவட்டத்தை அடைந்துள்ளது. நேற்று தனது பாதயாத்திரையின் போது பேசிய அண்ணாமலை "தமிழகத்தில் அண்ணாவின் கொள்கைக்கு நேர் எதிரான ஆட்சி நடந்து வருகிறது. அண்ணாவின் கோட்பாடுகளுக்கு எதிராக தற்போதைய திமுகவினர் உள்ளனர். தனது குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் அண்ணா திட்டவட்டமாக இருந்தார். ஆனால் தற்போது ஒரு குடும்பம்  தமிழகத்தை ஆள்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.தேர்தல் நெருங்குவதால் அரசியலுக்காக அண்ணாவை அண்ணாமலை தூக்கிப்பிடிப்பதாக கூறும் வடிவேலு காமெடி போல "இது வேற வாயி" என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai alleged govt that opposite to Anna policy for politics


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->