#சற்றுமுன் || உதயநிதியை அமைச்சராக ஆசைப்பட்ட அன்பில் மகேஷ் அடித்த அந்தர் பல்டி.!
ANBIL MAHESH SAY UTHAYANITHI MINISTER POSTING
கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைச்சர் அன்பில் மகேஷ், "உதயநிதி ஸ்டாலின் ஒரு தொகுதியில் செயல்படுவது உகந்ததல்ல. அவர் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பயன்படும் வகையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது குறித்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அவரை நான் சிறுவயதில் முதல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.
மேலும், "அவருடைய உற்ற நண்பனாக நான் சொல்கிறேன். அவருடைய ஜீன்., அவருடைய தாத்தா, அப்பாவுடைய ஜீன். கட்சிக்காக உழைப்பதும், அந்த கடமை உணர்ச்சியும் அவருக்கு அதிகம். அவர் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை. அவரை அமைச்சர் ஆக்க வேண்டும்" என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அன்பில் மகேஷ் முன்பு தனது ஆசை என்று சொல்லிவிட்டு இப்போது, உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ANBIL MAHESH SAY UTHAYANITHI MINISTER POSTING