கொதித்தெழுந்த சீமான்!....வடசென்னை வாழ்வதற்குத் தகுதியற்ற பகுதி!...திமுக மீது கடும் காட்டம்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், திருவொற்றியூர் வட்டத்தில், எர்ணாவூர் கிராமத்திற்கு அருகில் தற்போதுள்ள வளாகத்திற்குள் 1x660 மெகாவாட் நிலக்கரி அடிப்படையிலான எண்ணூர் அனல்மின் நிலையம்  விரிவாக்கத் திட்டத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது.

பல்வேறு சூழலியல் சிக்கல்களுக்கு இடையே மீண்டும் ஒரு அனல்மின் நிலைய விரிவாக்கம் மீள முடியா சீரழிவு நிலைக்கு இட்டுச்செல்லும். சாம்பல் கழிவுகளால் மக்கள் குடியிருப்புகளையும், நீர் நிலைகளையும் ஒரு புறம் சீரழிப்பதோடு காற்று மாசின் காரணத்தினால் வாழ்வதற்குத் தகுதியற்றப் பகுதியாக வடசென்னையை அங்கு இருக்கக்கூடிய அனல் மின் நிலையங்கள் மாற்றி வருகின்றன.

ஆண்டின் பெரும்பான்மை நாட்களில் காற்று மாசு விதிகள் குறிப்பிட்டுள்ள வரையறையைத் தாண்டி மாசு வெளியிடக் காரணமாகவும் இருக்கக்கூடிய அனல் மின் நிலையங்கள் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் குரல் வலுத்து வரும் நிலையில் எவ்வித சூழலியல் மீட்பு குறித்தும் நடவடிக்கை எடுக்காமல் நிலையற்றப் பகுதியில் மேலும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத்தினை முன்மொழிவது மக்கள் நலனுக்கும், சூழலியல் நலனுக்கும் எதிரான நடவடிக்கையாகும்.

நிலக்கரியைக் கொண்டு இயங்கக்கூடிய மின் உற்பத்தி முறைகளை உலக நாடுகள் கைவிட்டு வரும் நிலையில், இது தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்களில் இந்தியா கொடுத்துள்ள வாக்குறுதியினையும் பொருட்டாகக் கொள்ளாமல் தொடர்ந்து அனல் மின் நிலையங்களை அமைப்பது பன்னாட்டு விதிமீறலாகும்.

மேலும், வரும் 20-12-2024 அன்று, எண்ணூர் அனல்மின் நிலையத்திற்கானப் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில் இத்திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

ஏற்கனவே பரந்தூர், கன்னியாக்குமரி என்று பல்வேறு பகுதிகளில் மக்களின் எதிர்ப்பின் நடுவே திட்டங்களை முன்மொழிந்து வரும் நிலையில், மேலும் மக்கள் எதிர்ப்பிற்கு உள்ளாகாமல் இத்திட்டத்திற்கான முன்மொழிவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகின்றேன். மேலும், பொது மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An enraged seaman north chennai is an unfit area to live in hard against dmk


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->