அமமுக நகரச் செயலாளர் மகள் கல்லூரி விடுதியில் மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!
AMMK Founder TTv Dinakaran Insisted Proper Investigation For Girl Student Death in College Hostel
திருச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதுகுறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "அமமுக கட்சியின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகர கழகச் செயலாளராக இருப்பவர் பாலாஜி. இவரது மகள் தாரணி திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
அந்த கல்லூரியின் விடுதியிலேயே தங்கி படித்து வந்த தாரணி, திடீரென கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளார். மகள் தாரணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னதாக தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தாரணி தனது வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை பார்க்கச் சென்றும், கல்லூரி நிர்வாகம் அவர்களை நீண்ட நேரம் காக்க வைத்துள்ளது. இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் தாரணி தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தாரணியின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
எனவே இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி, மாணவி தாரணியின் மரணத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
AMMK Founder TTv Dinakaran Insisted Proper Investigation For Girl Student Death in College Hostel