மாநிலங்களவை தேர்தல் களம் சூடுபிடிப்பு....! - வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் ...! - Seithipunal
Seithipunal


தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் காலியாக இருக்கும் 37 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான காலக்கெடு ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. தமிழகத்தைச் சேர்ந்த கனிமொழி சோமு, திருச்சி சிவா, தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது.

இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்.

மேலும், மனுக்கள் திரும்ப பெற மார்ச் 9-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் மார்ச் 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் பலத்தை கணக்கில் கொண்டால், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 4 பேரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை காணப்படுகிறது.

இதையடுத்து, முக்கிய அரசியல் கட்சிகள் அடுத்த சில நாட்களில் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கத் தயாராகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajya Sabha election campaign heating up Filing nominations candidates begins today


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->