காவல்துறை ஈபிஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளதா? அமமுகவுக்கு சந்தேகம்..!! - Seithipunal
Seithipunal


அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையம் சென்றார். 

அப்போது விமான நிலைய பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி நின்றபடி பயணம் செய்த போது அருகில் நின்ற வாலிபர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவதூறாக பேசிய நபரை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் எச்சரித்து அவரின் செல்போனை பறித்து விமான நிலைய காவலரிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வெளியே வந்த அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் அவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரைக்கு சொந்த ஊருக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனுவை அளித்து இருந்தனர்.

இந்த புகாரின் பேரில் அரசியல் கட்சி தலைவரை பொதுவெளியில் அவதூறாக பேசியதாக ராஜேஸ்வரன் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை அமமுக தரப்பு காவல்துறை எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அமமுக அமைப்பு செயலாளர் மகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்னும் காவல்துறையை பொறுத்தமட்டில் எடப்பாடி அரசாங்கம் தான் நடக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது" என பேசியுள்ளார்.

மதுரைவிமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரன் அவனியாபுரம் போலீசில் நேற்று மாலை ஒரு புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK doubts that police are in control of EPS


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->