மத்திய மந்திரி அமித்ஷா சுற்றுப்பயண நிகழ்ச்சி திடீர் ரத்து: இதுதான் பிரச்சனையா? - Seithipunal
Seithipunal


மத்திய மந்திரி அமித்ஷா மதுரை, பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இன்று பேச இருந்தார். இதற்காக பா.ஜ.கவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வந்தனர். 

இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கும் அமித்ஷா சென்று பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மதுரைக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருவது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கட்சியினர், நிகழ்ச்சி ரத்து என்று மட்டும் தான் எங்களுக்கு தெரியும். இதனால் நிகழ்ச்சி மற்றொரு தேதிக்கு மாற்றப்படலாம் என தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே நேற்று முன்தினம் அமித்ஷா கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் மேடைக்கு மேல் டிரோன் ஒன்று பறந்ததாக இது தொடர்பாக மேடை அமைக்கும் பணியில் இருந்தவர்கள் கட்சியினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பறந்து கொண்டிருந்த ட்ரோன் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது மதுரை பற்றி குறும்படம் எடுக்க உள்ளதாகவும் அனுமதிக்காக காவல் நிலையத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனால் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டிருக்கலாம் என கட்சி வட்டாரங்கள் இடையே கருத்து நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah tour canceled 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->