எடப்பாடியிடம் ஆன்மீகத் தொகுதிகள் லிஸ்டை நீட்டிய அமித்ஷா? ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு..அதிர்ச்சியில் எடப்பாடி! - Seithipunal
Seithipunal


2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையில் சீட் ஒதுக்கீட்டைச் சுற்றி கடுமையான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

வட்டார தகவல்களின் படி, பாஜக தற்போது ஒரு புதிய நிபந்தனையை அதிமுக முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் முக்கிய ஆன்மீகத் தலங்கள் அமைந்துள்ள தொகுதிகளை பாஜக தமக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

பாஜக வட்டார தகவல்களின் படி, பழனி, ஸ்ரீரங்கம், மதுரை, திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் உள்ள தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பகுதிகள் “இந்து மத உணர்வு வாக்குகள்” அதிகம் உள்ள பகுதிகளாக இருப்பதால், பாஜக அதனை தன் வலயத்தில் கொண்டுவர முயற்சிக்கிறது.

ஆனால், இத்தொகுதிகளில் பல இடங்கள் அதிமுக வலுவாக நிலைநிறுத்திய பகுதிகள் என்பதால், பாஜக கோரிக்கை எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு பெரும் அதிர்ச்சியாக மாறியுள்ளது.

முன்னதாகவே பாஜக, “ஒரு மக்களவைத் தொகுதிக்கு குறைந்தது ஒரு சட்டமன்ற தொகுதி வேண்டும்” என்ற கோரிக்கையை வைத்திருந்தது. இதன் அடிப்படையில் 39 சட்டமன்ற தொகுதிகளை கேட்டு, அதற்கு கூடுதலாக ஆன்மீகத் தொகுதிகளையும் சேர்த்து கேட்டுள்ளது.

இதனால், பாஜக மொத்தம் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை தமக்காக எதிர்பார்க்கிறது.மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.அவர் கூறியதாகத் தகவல்,“பாஜகவுக்கு 20 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது.ஆன்மீக நகரங்கள் எங்களின் பாரம்பரிய வலயங்கள் —அவற்றை யாருக்கும் ஒதுக்க முடியாது. தேர்தல் நேரத்தில் தான் இதை முடிவெடுக்கலாம்,”என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணி கடுமையான தோல்வியைச் சந்தித்தது.அதன்பின் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி தொடர்ந்தது; அதிலும் தோல்வி ஏற்பட்டது.பின்னர் உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி முறிந்தது.2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனி போட்டியிட்டன; ஆனால் இருவருக்கும் தோல்வியே கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கூட்டணி மீண்டும் இணைந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கலாம் என்று கருதி,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாமாகவே இரு தரப்பினரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின் படி,பாஜக கேட்டுள்ள ஆன்மீகத் தொகுதிகள் பட்டியலை அமித்ஷா நேரடியாக தமிழக பாஜக தலைமை வழியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கியுள்ளார்.இந்தப் பட்டியலில் உள்ள பல தொகுதிகள் அதிமுக வலுவான பகுதிகளாக இருப்பதால்,அதிமுக நிர்வாகிகளும், தொகுதி பொறுப்பாளர்களும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன என்றாலும்,அதிமுக–பாஜக கூட்டணியில் ஏற்கனவே சீட் ஒதுக்கீட்டைச் சுற்றிய பதற்றம் துவங்கிவிட்டது.பாஜக கேட்டுள்ள ஆன்மீகத் தொகுதிகளை அதிமுக ஒதுக்குமா அல்லது தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறதா என்பதே இப்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய கேள்வியாகியுள்ளது.அடுத்தகட்ட முடிவு அமித்ஷா–எடப்பாடி சந்திப்பில்தான் தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah handed over a list of spiritual groups to Edappadi Edappadi was shocked for a moment


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->