21+18 =39 தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உறுதி! திமுக தான் டார்கெட்! அமித் ஷா போட்ட சூப்பர் ஃபார்முலா!
Amit shah BJP ADMK Alliance DMK MK Stalin
நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் என்றும், திமுகவை வேரோடு பிடுங்கி அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திமுக கூட்டணியின் நோக்கம் உதயநிதியை முதல்வராக்குவதே என குற்றம்சாட்டிய அமித் ஷா, சோனியா காந்தியின் இலக்கு ராகுலை பிரதமராக்குவது தான் என்றும், ஆனால் பாஜக-அதிமுக கூட்டணியின் குறிக்கோள் தமிழக மக்களின் முன்னேற்றமே எனவும் கூறினார்.
மேலும், டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் உள்ளிட்ட துறைகளில் திமுக ஊழல் தொடர்கிறது என்று அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
சிறையில் இருக்கும் நிலையில் சில அமைச்சர்கள் பதவியில் நீடிப்பது சட்ட விரோதம் என்றும், பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி மாதிரி சிறையில் இருந்தும் பதவியில் இருந்ததை சுட்டிக்காட்டினார். சிறையில் இருந்தபடி ஆட்சியை நடத்தலாமா என அவர் கேள்வி எழுப்பினார்.
திமுகவை தோற்கடித்து தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்வதற்காக அனைவரும் பாடுபட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 18% வாக்குகளையும், அதிமுக 21% வாக்குகளையும் பெற்றிருந்தது. இரண்டையும் இணைத்தால் 39% வாக்குகள் கிடைக்கும் என்பதால் வெற்றி சாத்தியம் அதிகம் என நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது சாதாரண அரசியல் கூட்டணி அல்ல, மக்களின் வளர்ச்சிக்கான கூட்டணி என்றும் அமித் ஷா உரையாற்றினார்.
English Summary
Amit shah BJP ADMK Alliance DMK MK Stalin