கருத்துக்கணிப்பு எல்லாம் சும்மா...200 தொகுதிகளே எங்களின் இலக்கு...! - 'விசில் புரட்சி'யை கிளப்பிய செங்கோட்டையன்...!
All polls useless our target 200 seats Sengottaiyan who sparked Whistle Revolution
தமிழ்நாடு,மேற்குவங்காளம், அசாம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு அரசியல் சூழ்நிலைக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளன.மேற்குவங்காளத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததும், அனைத்து கருத்துக் கணிப்பு நிறுவனங்களும் தங்களது முடிவுகளை வெளிப்படுத்தின.
அவற்றில், தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது. அதே சமயம், அ.தி.மு.க. குறிப்பிடத்தக்க தொகுதிகளைப் பெறும் என்றும், த.வெ.க. இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில், த.வெ.க. நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கருத்துக் கணிப்புகள் ஒரு பக்கம், மக்களின் உண்மையான தீர்ப்பு முற்றிலும் வேறு பக்கம். அனைத்து கணிப்புகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பு என்பது சிலரின் பார்வை மட்டுமே. மக்கள் மத்தியில் ‘விசில் புரட்சி’ எழுந்துள்ளது; அதனால் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என உறுதியாக தெரிவித்தார்.
English Summary
All polls useless our target 200 seats Sengottaiyan who sparked Whistle Revolution