தமிழ்நாட்டையே I.C.U.-வில் அட்மிட் செய்த ஸ்டாலின் அரசு... உதயநிதிக்கு அதிமுக பதிலடி!
AIADMK Reply to DMK Udhay
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, "எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், நீங்கள் ஆம்புலன்ஸ் வண்டிகளை நிறுத்த முயற்சி செய்கிறீர்கள்.
ஆனால் உங்கள் கட்சியையே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றிக்கொள்ளும் நிலைமையில் தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் உங்கள் கட்சியை ICU-வில் அனுமதிக்க வேண்டிய நிலை வரும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதற்க்கு அதிமுக கொடுத்த பதிலில், "வணக்கம் துணை முதல்வரே..... எங்க இருந்தீங்க இத்தனை நாளா? ஆளையே காணோமே?
இன்னும் ரெண்டு நாள் போயிருந்தா, நாங்களே விளம்பரம் கொடுக்கலாம் ன்னு இருந்தோம்..
அப்புறம், என்ன சொன்னீங்க?
அஇஅதிமுக, I.C.U-வில் போகுமா?
உண்மையில்,
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு I.C.U-வில்!
பெண்கள் பாதுகாப்பு I.C.U-வில்!
பொருளாதார நிலைமை I.C.U-வில்!
மக்களின் வாழ்வாதாரம் I.C.U-வில்!
இதெல்லாம் பொம்மை முதல்வரின் வழித்தோன்றலாக இருக்கும் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
இப்படி தமிழ்நாட்டையே I.C.U.-வில் அட்மிட் செய்த ஸ்டாலின் அரசிடம் இருந்து #மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் என செல்லும் வழியில், குறுக்கே வரும் "அறிவாலய ஆம்புலன்ஸ்"களை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்போம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
AIADMK Reply to DMK Udhay