#BREAKING:: கோவில்பட்டியில் பரபரப்பு.. அண்ணாமலையை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவில் இருந்து விலகிய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இதன் காரணமாக அதிமுக மற்றும் பாஜக இடையே அரசியல் ரீதியில் மோதலை உண்டாக்கியுள்ளது. கூட்டணி தர்மத்தை மீறி எடப்பாடி பழனிச்சாமி பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்ததாக கூறி கோவில்பட்டியில் பாஜகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி யின் உருவ படத்தை எரித்த தூத்துக்குடி மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் உட்பட 4 பேரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து உள்ளனர். 

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக நிர்வாகிகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கோவில்பட்டியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் முன்பு அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் கலவரத்தை தூண்டுவதாக கோஷமிட்டவாரு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கோவில்பட்டி நகரப் பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK protests against Annamalai in Kovilpatti


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->