பெரும் அதிர்ச்சியில் ஓபிஎஸ்! இபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கேபி முனுசாமி! - Seithipunal
Seithipunal


அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் செயல்பட, ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் ஒருபக்கம் செயல்படுகிறார்.

இதில் கிருஷகிரி மாவட்டத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியில் யார் இருக்கிறார் என்று கேட்கும் அளவிற்கு அணி மாறும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

அண்மையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்து கொண்ட நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே கே வெங்கடாசலம் ( கிருஷ்ணகிரி தொகுதி அமைப்பாளர்) தனது ஆதரவாளர்களுடன் கே பி முனுசாமியை சந்தித்து அதிமுகவில் (இபிஎஸ்) இணைந்துள்ளார்.

கே பி முனுசாமியின் தீவிர எதிர்பாளராக இருந்த ஜேகே வெங்கடாசலம் தற்பொழுது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் அணிக்கு தாவியுள்ள சம்பவம் ஓபிஎஸ்-க்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதற்கிடையே வெளியான ஒரு தகவலின்படி, ஓபிஎஸ்-யை நேரில் சந்தித்து நிர்வாகிகளை நியமிக்க ஜேகே வெங்கடாசலம் வலியுறுத்தியும், அதற்க்கு வைத்தியலிங்கம் மற்றும் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் முட்டுக்கட்டை போட்டதால் இந்த அணி தாவல் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK OPS vs EPS Vengadachalam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->