கூடுகிறது ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் கூட்டம்.!  வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவினர் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக தமிழக முதல்வர் மாவட்டம் வாரியாக சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில், தலைமை கழகத்தில் 20.11.2019 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள  நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் இந்த கூட்டத்தில், தேர்தல் அறிக்கை சம்மந்தமாக ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Meeting nov 20


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->