அதிமுக கடிதங்கள் குறித்து நாளை சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை இன்று துவங்கியது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணி வரை தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதனை அடுத்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது "நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இந்தி திணிப்பிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும். மேலும் கூடுதல் செலவு திட்டத்திற்கு மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடைபெறும். சட்டப்பேரவை நடைபெறும் இரண்டு நாட்களிலும் கேள்வி நேரம் ஒதுக்கப்படும்" என செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

அப்பொழுது செய்தியாளர்கள் "அதிமுகவில் இரு அணிகளும் கொடுக்கப்பட்ட கடிதங்கள் குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டது" என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு "இந்த கடிதங்கள் குறித்து நான் முடிவை பொதுவெளியில் அறிவிக்க முடியாது. இது குறித்தான அறிவிப்புகள் நாளை சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும் தெரிவிக்கப்படும். இது போன்ற விஷயங்களை பொதுவெளியில் சொல்வது நன்றாக இருக்காது" என பதில் அளித்தார். 

இன்றைய சட்டத் பேரவையின் முதல் நாளில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல் நாள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி சபாநாயகரை சந்தித்து பேச உள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK letters decision will be announced in the Assembly tomorrow


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->