கூட்டணி முடிவை அறிவித்த பாமக... கே.பி முனுசாமியின் அந்த வார்த்தை.!! நோட் பண்ணீங்ளா.?? - Seithipunal
Seithipunal


கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இன்று சென்னையில் பொதுக்குழு கூட்டம் நடத்தி தீர்மானம் மூலம் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. 

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் தேசிய நலன் மற்றும் மாநில நலன் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அதே வேளையில் மாநில உரிமைகளை மத்திய பாஜக அரசு பறிப்பதாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம் பெறுவதை கேள்விக்குறியாக்கியுள்ளது. இது வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் கூட்டணி முடிவு எடுக்கும் முழு அதிகாரமும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவரது முடிவை பொறுத்து எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது இறுதி செய்யப்படும்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக துணை பொதுச் செயலாளர் அதிமுக தேர்தல் தொகுதி பங்கிட்டு குழு தலைவருமான கே.பி முனுசாமியிடம் பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் "நாங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் "அய்யா அவர்கள்" என்ன பேசினார், அவர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது. முழு விவரம் அறிந்த பிறகு இது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்" என கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்துஅதிமுக பாமக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கும் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK kpmunusamy reaction after pmk alliance announcement


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->