அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல்! எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தந்த மா.செ.,க்கள் யார்? யார்?! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர்.

இன்று காலை சுமார் 11.20 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதனிடம் எடப்பாடி பழனிசாமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியிட ஆதரவு தெரிவித்து, வழிமொழிந்த மாவட்ட செயலாளர்கள் யார்? யார்? 

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம், ஜெயக்குமார், கேபி அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜு, பரஞ்சோதி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஓ எஸ் மணியன், சி விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், அக்ரிகிருஷ்ணமூர்த்தி, பாலகங்கா உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.

பொதுச்செயலாளர் தேர்தலில் 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளிட்ட பல விதிகள் இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது.

அதே சமயத்தில் இந்த பொதுச்செயலாளர் தேர்தலை தடுக்க ஓபிஎஸ் சட்டப்போராட்டத்தை முன்னெடுப்பர் என்று சொல்லப்படுகிறது.

மேலும், இதுகுறித்து இன்று பிற்பகலுக்குள் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK General Secretary Election Nomination EPS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->