BREAKING : ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்.! - Seithipunal
Seithipunal


ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்த பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், முன்னதாக நடைபெற்ற பொதுக்குழுவுக்கு உறுப்பினர்கள் அல்லாத 600 பேர் வந்திருந்ததால்தான் பிரச்சனை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஒரு கட்சி கண்ணியம், கட்டுப்பாடு இல்லாமல் ஜனநாயகத்திற்கு புறம்பாக பொதுக்குழுவை நடத்தினார்கள். மேலும், நீதிமன்றம் கூறிய அறிவுரையை கேட்காமல் தீர்மானம் கொண்டு வந்தது தவறு என்று கூறி நாங்கள் அன்று வெளிநடப்பு செய்தோம். இந்த வேளையில், பொதுக்குழுவுக்கு போன உறுப்பினர்கள் மீண்டும் எங்கள் வசம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறாது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK general body meeting will not be held on July 11 OPS supporter Vaithilingam


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->