அமித் ஷா அழைத்தும் போகாத இபிஎஸ்! அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்களை உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் முதல் கட்ட தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என உறுதியாகிவிட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே முரண்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டார் வருகிறது. இதற்கு சமீபத்தில் உருவான சில கருத்து வேறுபாடுகளும் அரசியல் சூழ்நிலைகளும் காரணமாக அமைந்துள்ளது. 

சமீபத்தில் வெளியான உச்சநீதிமன்றதின் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த 2005-2006ம் ஆண்டு காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தை 2019 ஆம் ஆண்டு பாஜக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. காங்கிரஸ் கட்சியில் கூட்டணியில் அங்கம் வகித்தபோது ஆதரித்த திமுக பாஜக அரசால் கொண்டுவரப்படும் போது கடுமையாக எதிர்த்தது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இந்த சட்டத்தினை வரவேற்கும் பொழுது திமுக மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் இதனை கடுமையாக எதிர்க்கின்றன. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி திமுக-காங்கிரஸ் இடையே கொள்கை முரண்பாடு உள்ளது என பகிரங்கமாக தெரிவித்தார். மேலும் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை ஆனதற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் திமுகவினர் வரவேற்றது காங்கிரசை மேலும் கடுப்பாக்கியது.

இது ஒரு புறம் இருக்க அதிமுகவின் அரசியல் ஆலோசகராக இருந்த சுனில் தற்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆலோசகராக இருந்து வருகிறார். அவர் மூலம் காங்கிரஸ்-அதிமுக கூட்டணி அமையப்போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்த அமித் ஷா பழனிச்சாமியை சந்திக்க வேண்டுமென அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் அதனை பழனிச்சாமி நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. அமித்ஷா கலந்துகொண்டு இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு துவக்க விழாவில் பன்னீர் செல்வத்திற்கு அருகே இரண்டு இருக்கைகள் காலியாக இருந்ததற்கு இதுவே காரணம். 

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜக எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி தருவதாக சொல்லப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க வேண்டும் என பாஜக தலைமை நெருக்கடி தருவதால் பாஜகவை கூட்டணியில் வைக்கலாமா வேண்டாமா என ஆலோசனை தொடங்கியுள்ளார் பழனிச்சாமி. மேலும் பாஜகவை கூட்டணியில் இணைத்தால் அதிமுகவின் வாக்கு வங்கியும் சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் சரியும் என பழனிச்சாமி கணக்கு போட தொடங்கிவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் முனுமுனுக்கின்றன.

தற்பொழுதுள்ள கூட்டணி கட்சிகளில் பாஜகவை கழட்டிவிட்டு மற்ற கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இ.பி.எஸ் திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன. அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறினால் சில சிறுபான்மை இன கட்சிகளும் அமைப்புகளும் திமுகவின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக அதிமுகவிற்கு முழு ஆதரவு தர தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்சனையின் காரணமாக காங்கிரஸ் தலைமை அதிமுகவுடன் கூட்டணி சேர்வதில் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள உட்கட்சித் பிரச்சனை தொடர்பான வழக்கு முடிவு பெற்றால் தமிழகத்தில் தேர்தல் கூட்டணி என்பது பல்வேறு மாற்றங்களை உண்டாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Congress alliance will be possible in the parliamentary elections


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->