திமுகவில் யாருக்குப் பெட்டி தூக்கிக் கொண்டிருந்தார்... "ஆதவ் அர்ஜூனாவிற்குப் பேசத் தகுதியில்லை" எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
AIADMK Chief Edappadi Palaniswami Strongly Attacks TVK Aadhav Arjuna; Calls Him a Party-Hopper
மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கடும் சாடல்களை முன்வைத்துள்ளார்.
பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் முக்கியப் பேச்சு:
மகன் குறித்த குற்றச்சாட்டிற்குப் பதில்: "என் மகன் அதிமுகவின் சாதாரண உறுப்பினர் மட்டுமே; எந்தப் பொறுப்பிலும் இல்லை. அதிமுக சொத்துக்களைப் பறிப்பதாகக் கூறும் ஆதவ் அர்ஜூனாவிற்கு மற்றவர்களின் சொத்துக்களை ஆட்டையைப் போட்டுப் பழக்கப்பட்டதால் அப்படிப் பேசுகிறார்" எனக் காட்டமாகக் குறிப்பிட்டார்.
கட்சித் தாவல் வரலாறு: "ஆதவ் அர்ஜூனா திமுகவில் யாருக்குப் பெட்டி தூக்கிக் கொண்டிருந்தார் என்பது தெரியும்; அங்கிருந்து விசிக சென்று விரட்டப்பட்டார். பின்னர் அதிமுகவிற்கு வந்து 'துணைப் பொதுச்செயலாளர்' பதவி கேட்டார். உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி தருவோம் எனக் கூறி மறுத்ததால், தற்போது விஜய்யைச் சந்தித்து தவெகவில் இணைந்துள்ளார்."
ஒரிஜினல் ரத்தம் vs கலப்பட ரத்தம்: "1974-ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 50 ஆண்டுகளுக்கு மேலாக அணி பிறழாமல் அதிமுகவில் கிளைச் செயலாளர் முதல் பொதுச்செயலாளர், எம்.எல்.ஏ, எம்.பி, முதலமைச்சர் என உழைத்து உயர்ந்துள்ளேன். என் உடலில் ஓடுவது ஒரிஜினல் அதிமுக ரத்தம். பல கட்சிகளுக்கு மாறி வந்த ஆதவ் அர்ஜூனாவின் உடலில் ஓடுவது கலப்பட ரத்தம்" என்று சாடினார்.
நாவடக்கம் தேவை: "பதவி வரும்போது பணிவு வர வேண்டும். கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகள் மட்டுமே ஆகி, முளைத்து 3 இலை கூட விடாத சூழலில் இந்த ஆட்டம் ஆடுபவர்கள் முன்னிலையில், பொன்விழா கண்ட அதிமுகவை விமர்சிக்க அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை" எனக் கடுமையாகச் சீறினார்.
English Summary
AIADMK Chief Edappadi Palaniswami Strongly Attacks TVK Aadhav Arjuna; Calls Him a Party-Hopper