#BigBreaking || திடீர் திருப்பம்... ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட மொத்த பொதுக்குழுவுக்கும் ஆப்பு.?! சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு?!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியான தகவலின் அடிப்படையில் கீழ்காணும் செய்தி கொடுக்கப்படுகிறது.

பொதுக்குழுவில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக கூறி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், "கடந்த இருபத்தி மூன்றாம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுக்குழுவுக்கு முன்னதாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்னதாக அறிவிக்க வேண்டும் எனவும், மேலும் புதிய தீர்மானங்கள் எதுவும் பொதுக்குழுவில் நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்கள் தவிர புதிதாக வேறு எதுவும் தீர்மானங்கள் நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர வேறு எந்தத் தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி, 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இருபத்திமூன்று தீர்மானங்களும் நிராகரிக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனு தமிழ்மகன் உசேன் இடம் வழங்கப்பட்டது. ஜுலை 11 ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது அனைத்தும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய செயல். இது நீதிமன்ற அவமதிப்பும் கூட.

எனவே, இது தொடர்பாக அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று சண்முகம் அந்த மனுவில் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk shanmukam appeal to chennai hc ops eps issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->