அனைத்து இடங்களிலும் அதிமுக போட்டி.! கூட்டணி கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் 19 மாதம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

"கழக வேட்பாளர்கள் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் தவிர, மற்ற வார்டுகள் 

தமிழ் மாநில காங்கிரஸ், 
புதிய நீதிக் கட்சி , புரட்சி பாரதம், 
சமூக சமத்துவப் படை, 
பாரதிய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கழகத்தின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தில் போட்டியிடுவார்கள். 

மேலும், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அந்த அறிவிப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS EPS ANNOUNCE FOR ELECTION 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->