கூட்டணி முடிவில் குழப்பம்... ஓபிஎஸ்-ன் அடுத்த கட்ட முடிவு...! நிர்வாகிகள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!
admk ops bjp admk aLLIANCE
அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லாத நிலையில், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து அறிவிக்க, வரும் டிசம்பர் 15ஆம் தேதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப் போவதாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) அறிவித்திருந்தார். ஆனால், தற்போது அந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி சந்திப்புகள்:
சமீபத்தில் டெல்லி சென்ற ஓபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேசினார். அதிமுகவில் தன்னைச் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்துவரும் நிலையில், பாஜக கூட்டணியில் தனியாக இணைந்து தேர்தலைச் சந்திப்பது குறித்து அவர் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசிய பின் டெல்லி சென்றுள்ளார். அவர் ஓபிஎஸ் விவகாரம் குறித்து அமித் ஷாவைச் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டம் ஒத்திவைப்பு:
எந்தக் கூட்டணியில் சேருவது என்ற முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ள ஓபிஎஸ், டிசம்பர் 15ஆம் தேதி நடத்தவிருந்த மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளார். இந்தக் கூட்டத்தை அவர் டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர். நினைவு நாளில் கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் காரணமாகவே இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
English Summary
admk ops bjp admk aLLIANCE