திடீர் திருப்பம்: அதிமுக கூட்டணியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கட்சி.! 10 தொகுதி கன்ஃபார்ம்.! பரபரப்பில் தமிழகம்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கான தேதியை அறிவிக்கும் தேதி இன்னும்., பத்து அல்லது பதினைந்து நாட்களில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கணக்குகளை மும்முரமாக முன்னெடுத்துள்ளன. யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். கூட்டணி கட்சிகளின் வாக்கு சதவீதவிகிதத்தை வைத்து எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம், வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு எப்படி என்பது குறித்த ஆலோசனைகளிலும், ஆய்வுகளிலும் தமிழக அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கட்சி இணைய உள்ளதாக செய்திகள் பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தான் அதிமுக கூட்டணியில் இடம் பெற உள்ளதாக பேசப்படுகிறது.  வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்கு தயாராகி வரும் நாம் தமிழர் கட்சியா அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பேச்சு அடிபடுவது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியா?., என்ற முதல் கேள்வி அனைவருக்குமே எழுந்தாலும், அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவது என்னவெனில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் 4 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. ஆனால் தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் இரண்டு சதவீதம் மட்டுமே வாக்குகளை பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக எங்களுக்கு 40 தொகுதிகள் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லை என்றால் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்று உறுதியாக உள்ளது. ஒருவேளை தேமுதிக., அதிமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்றுக்கொள்ளாமல் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால்., தேமுதிகவின் இடத்தை நிரப்புவதற்கு நாம் தமிழர் கட்சி உள்ளே இழுக்க அதிமுக 'கூட்டணி' பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளுக்கு குறைந்து போட்டியிடாது என்று கள நிலவரமும் தெரிவிக்கின்றது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும்பட்சத்தில் தேமுதிக கேட்ட தொகுதிகள் கிடைப்பது மிகக் கடினம்.

அந்த வகையில் 4 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியை அதிமுக கூட்டணியில் இணைந்து 10 முதல் 15 தொகுதிகளை கொடுக்கவும் அதிமுக தயாராக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி பேரங்கள் படு சூடாக நடக்கும். அப்போது இது குறித்தான உண்மை வெளியாகும். 

மேலும், அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் இடம்பெறுவதற்கான முக்கிய காரணம் ஒன்று இருக்கும் என்றால்., அது ஈழம் -காங்கிரஸ் -திமுக கூட்டணி ஒன்றே தான் இருக்கும். இதன் காரணமாக திமுக வெற்றி பெறவே கூடாது என்று அதிமுக பக்கம் நாம் தமிழர் சேர வாய்ப்பு அதிகம்.

அதே சமயத்தில் சீமானின் முக்கிய கொள்கையான தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் எனும் கொள்கையின்படி, தமிழகத்தை தற்போது ஒரு தமிழன்தான் ஆண்டு கொண்டிருக்கிறார். அந்த அடிப்படையிலும் நாம் தமிழர் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெறலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK NTK Alliance


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->