அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்., சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். (அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது)

இதேபோல், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ ஓ எஸ் மணியன் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். (அதிமுக எம்எல்ஏ ஓ எஸ் மணியன் 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த இரண்டு வழக்குகளையும் இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு சம்பந்தமாக அதிமுக எம்எல்ஏக்கள் ஓ எஸ் மணியன், அசோக்குமார் மற்றும் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் ஆறாம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இதேபோல் முன்னதாக, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக, துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் அதிகாரி, தமிழக தேர்தல் அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mla o s maniyan victory case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->