#BigBreaking || அதிமுகவுக்கு மதியம் ஒருமணி வரை கெடு... சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


வரும் 23-ஆம் தேதி நடக்க உள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு  முடித்துவைக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், "வருகின்ற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் சட்டமன்ற- பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

சுமார் 2500 பேர் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதன் காரணமாக உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக டிஜிபி க்கு, ஆவடி காவல்துறை ஆணையருக்கு மனு அளித்தேன்.

ஆனால் இந்த மனு மீதான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 15ஆம் தேதி மனு அளித்த நிலையில் இதுவரை எந்த எடுக்காததால், பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு கால தாமதம் நடந்து வருகிறது.

பொதுக்குழு கூட்டத்திற்கு இன்னும் ஓரிரு தினங்களில் மட்டுமே உள்ள நிலையில், இந்த பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்காக காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து நாங்கள் அளித்துள்ள மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை சற்று முன்பு விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், காவல்துறையின் கேள்விகளுக்கு அதிமுக சார்பில் மதியம் ஒரு மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், எம்பி, எம்எல்ஏக்கள் யாராக இருந்தாலும் அனைவரும் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK MEET CHENNAI HC ORDER JUNE


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->