அதிமுகவின் முன்னாள் எம்பி திமுகவில் இணைந்தார்.. மகிழ்ச்சியில் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. இன்னும் தமிழகத்தில் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் செய்து வருகின்றனர். தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பழம்பெரும் நடிகர் எஸ்எஸ்ஆர் மகனும் முன்னாள் அதிமுக எம்பியுமான ராஜேந்திரகுமார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதுபோது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் முனைவர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., ஆ.இராசா, எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex mp rajendra kumar join dmk


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal