இன்று முதல்.. களத்தில் இறங்கிய அதிமுக தேர்தல் அறிக்கை குழு.! - Seithipunal
Seithipunal


நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றதைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கை குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் அறிக்கையை தயார் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவின் 2-ம் கட்ட கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

"அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு, நாளை அதாவது இன்று முதல் 10-ந் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். மண்டல வாரியாக சுற்றுப்பயணம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5-ந் தேதி இன்று காலை சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் நகரங்கள் உள்ளடங்கிய சென்னை மண்டலத்துக்கு குழுவினர் செல்கிறார்கள். 

மாலை வேலூர் மண்டலத்துக்கு செல்கிறார்கள். 6-ந் தேதி விழுப்புரம், சேலம் மண்டலங்கள், 7-ந் தேதி தஞ்சை, திருச்சி மண்டலங்கள், 8-ந் தேதி கோவை மண்டலம், 9-ந் தேதி மதுரை மண்டலம், 10-ந் தேதி நெல்லை மண்டலம் என இக்குழுவினர் மக்களை சந்திக்க செல்கிறார்கள்.

மக்கள் பிரச்சினைகளை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்ய இருக்கிறோம். எந்த கட்சியும் தயாரிக்காத வகையில் சிறப்பான தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்க இருக்கிறோம். விவசாயிகள் முதல் வெளிநாடு வாழ் தமிழர்கள் வரை தங்கள் கருத்துகளை ஆன்லைன் வழியாகவும், கூரியர் மூலமாகவும் அ.தி.மு.க.வுக்கு தெரிவிக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Election Manifesto team start tour in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->