வெற்றி மெகா ஊழல்: மின் கொள்முதல் விவகாரத்தில் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்தார் எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் மின்கொள்முதல் விவகாரம் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய முக்கியக் குற்றச்சாட்டுகள்:
அதிக விலை மின் கொள்முதல்: இந்தியாவில் எந்த மாநிலமும் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்துக் கொள்முதல் செய்ததில்லை என அவர் தெரிவித்தார்.

நிர்வாகத் தோல்வி: மின்வாரியம் ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த அரசின் மின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்றார்.

செயற்கைத் தட்டுப்பாடு மற்றும் ஊழல்: திட்டமிட்டு 4 மாதங்களாக மின் கொள்முதல் செய்யாமல் பொதுமக்களைச் சிரமப்படுத்திவிட்டு, தற்போது செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்குக் கொள்முதல் செய்துள்ளதை "வெற்றி மெகா ஊழல்" என அவர் வர்ணித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Edappadi K Palaniswami Slams TVK Government Over High-Cost Power Procurement


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->