தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணம்..!! இ.பி.எஸ் தரப்பினருக்கு குஷி..!! அதிர்ச்சியில் உறைந்த ஓபிஎஸ்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை விவகாரத்தால் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கு விசாரணை முடிவில் சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஓபிஎஸ் தரப்பினரின் மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் இபிஎஸ் தரப்பினர் அதிமுக பொதுக்குழு சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காததால் தேர்தல் ஆணையத்தையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் அது குறித்தான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி இ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அதிமுகவின் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்கள் 29/09/2022 தேதியை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆவணங்களில் இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் கையொப்பமிட்டுள்ளார். இந்த ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 03/10/2022 அன்று ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்துள்ளது. அதிமுகவின் வரவு செலவு தொடர்பான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்காத நிலையில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் சமர்ப்பித்த வரவு செலவு கணக்கு ஆவணங்களை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இது இபிஎஸ்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK document signed by EPS approved by Election Commission


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->