முக ஸ்டாலின் அரசின் அராஜகம்! மன்னராட்சியா நடத்துறீங்க? ஊடகங்களுக்கு மிரட்டல்...? அதிமுக ஆதாரத்துடன் கடும் கண்டனம்!
ADMK Condemn to DMK MK Stalin
அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "தமிழ்நாட்டில் இன்று நடப்பது மக்களாட்சியா, இல்லை மன்னராட்சியா? ஜனநாயகமா, அல்லது சர்வாதிகாரமா?
ஊடகம் என்பது மக்களின் குரல். அந்தக் குரலை ஒடுக்க நினைப்பது மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரான செயல்.
ஊடக சுதந்திரத்தில் தலையிட்டு, அரசு அதிகாரிகளை ஏவி மிரட்டலும் அழுத்தமும் கொடுக்கும் ஸ்டாலின் அரசின் அராஜகப் போக்கு, அவர்களின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
ஒரு செய்தியை எவ்வாறு, எவ்வளவு நேரம் வெளியிட வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஊடக ஆசிரியர்களின் தொழில்முறை உரிமை. அதில் தலையிடுவது சர்வாதிகார மனநிலை,
அம்மனநிலை மற்றும் ஜனநாயகமற்ற செயல்பாடுகளின் தாக்கத்தால் இன்று ஒரு தொலைக்காட்சியின் சீனியர் எடிட்டர் நேரடியாக , இவ்வரசின் அடக்குமுறைக்கு எதிராக கொந்தளித்து தன் கண்டனங்களை தெரிவித்து சமுக ஊடக குழுவில் பதிவிட்டு இருப்பது , முக ஸ்டாலின் அரசின் அராஜகங்களுக்கு எதிரான பெருங்கோபத்தின் வெளிப்பாடு.
மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று, விடியா அரசுக்கு ஏவல் செய்யும் அதிகாரிகள், ஆட்சி மாற்றமும் , அஇஅதிமுக ஆட்சியும் வருவதற்கு வெகுநாட்கள் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம்.
.
இதற்கு முன்னர் , கரூரில் செய்தியாளர்மீது ஒரு சட்டமன்ற உறுப்பினரே நடத்திய தாக்குதல், இந்த அரசின் ஊடக விரோத முகத்தை ஏற்கனவே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இது ஒரு செய்தியாளர்மீது நடந்த தாக்குதல் அல்ல; மக்களின் தகவல் அறியும் உரிமையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.
ஊடகங்களை அடக்கி ஒடுக்கலாம் என நினைக்கும் பொம்மை முதலமைச்சர் அவர்களே, இத்தகைய ஜனநாயக விரோத முயற்சிகளை உடனடியாக கைவிடுங்கள்.
நடுநிலையோடு செய்தி வெளியிடும்
ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும்
எவ்வித அச்சுறுத்தலும் ஏற்பட்டால்,
அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக அதிமுக என்றும் முன்னின்று துணை நிற்கும். ஊடக சுதந்திரம் காக்கப்படும். ஜனநாயகம் பாதுகாக்கப்படும்
English Summary
ADMK Condemn to DMK MK Stalin