உங்கள் காவல்துறையின் அராஜகத்திற்கு நீங்கள் எப்போது பொறுப்பேற்கப் போகிறீர்கள் முக ஸ்டாலின்? அதிமுக கேள்வி! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணம் காவல் மரணம்தான் (LockUp Death) என்பதை சிபிஐ இன்று ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளது.

​ஒரு ஏழை இளைஞனை எந்த ஆதாரமும் இல்லாமல், ஒரு பெண் கொடுத்த பொய்ப் புகாரை வைத்துக்கொண்டு தூக்கிச் சென்று, அடித்துத் துவைத்து, சித்திரவதை செய்து கொன்றிருக்கிறது இந்த விடியா அரசின் காவல் துறை!

அஜித்குமார் நகை திருடவில்லை, அவர் ஒரு அப்பாவி என்று சிபிஐ சொல்லும் வரை இந்த அரசு மௌனமாக இருந்தது ஏன்? 

பொய்ப்புகாருக்காக ஒரு உயிரையே பறிக்கும் அளவிற்கு துணிச்சல் இந்த காவலர்களுக்கு எங்கிருந்து வந்தது? 

அஜித்குமார் ஒரு அப்பாவி என்று CBI விசாரணை தெளிவுபடுத்தி விட்டது. ஒரு பொய்ப் புகாரை நம்பி ஒரு இளைஞனின் உயிரைப் பறித்த உங்கள் காவல்துறையின் அராஜகத்திற்கு நீங்கள் எப்போது பொறுப்பேற்கப் போகிறீர்கள் முக ஸ்டாலின்?

தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் உங்கள் துறையில் நடந்த இந்த லாக்-அப் கொலைக்கு நீங்கள்தான் முழுப்பொறுப்பு!

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர் ஆட்சி அல்ல என்பதை, ஆட்சி முடியப் போகும் நேரத்திலாவது உணர முயற்சி செய்யுங்கள் பொம்மை முதல்வரே" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->