பேட்டி கொடுத்து சிக்கிய ஸ்டாலின்.! அதிமுக எடுத்த நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நேற்று மாலை முதல் அரசியல் கட்சி தலைவர்கள் பேட்டி கொடுப்பது, பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனைக்கு, திமுக தலைவர் கண்டனம் தெரிவித்து பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில், ஆளும் கட்சிகளை விமர்சம் செய்து, பேட்டியளித்து இருந்தார்.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், ''மக்களவை தேர்தலை முன்னிட்டு 16-ந்தேதி மாலை 6 மணி முதல் அமைதி காலம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த விதியை கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

English Summary

admk complait to election commission


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal