சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறும் அமெரிக்கா; சீனா கண்டனம்..!
China condemns the US for violating international law
வெனிசுலாவில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு சென்ற கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இதற்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறி உள்ளதாவது:
பிற நாடுகளின் கப்பல்களைத் தன்னிச்சையாகப் பறிமுதல் செய்வதன் மூலம், அமெரிக்கா சர்வதேசச் சட்டத்தை கடுமையாக மீறியுள்ளது என்று கடுமையாக சாடியுள்ளார். சர்வதேசச் சட்டத்தில் அடிப்படையற்ற அல்லது ஐ.நா. பாதுகாப்பு சபையின் அங்கீகாரம் இல்லாத அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச சட்டவிரோதத் தடைகளுக்கு எதிராகவும், பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராகவும் சீனா நிற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வெனிசுலாவுக்கு மற்ற நாடுகளுடன் பரஸ்பர நன்மை பயக்கும் உறவை வளர்த்துக்கொள்ளும் உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் வெனிசுலாவின் நிலைப்பாட்டிற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு உண்டு என்று நாங்கள் நம்புகிறோம் என்று லின் ஜியான் கூறியுள்ளார்.
English Summary
China condemns the US for violating international law