கூட்டணியில் மாற்றம் இருக்கலாம்... எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!
ADMK BJP TVK Alliance EPS
செய்தியாளர்களை இன்று சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரசார இடங்களில் த.வெ.க.வினர் வரவேற்பு அளிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “அவர்கள் விருப்பத்தால் வந்துள்ளனர். தலைமையின் அனுமதி பெற்று வருமாறு எங்களும் கேட்டோம். எங்கள் மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதால் அவர்கள் கலந்துகொண்டனர். இதை எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கில் விமர்சிக்கின்றனர்” என்றார்.
மேலும் அவர், “பாஜக உடன் கூட்டணி வைத்த நாளிலிருந்து நாங்கள் எப்போதும் விமர்சிக்கப்படுகிறோம். ஆனால் யாருடன் கூட்டணி வைப்பது எங்கள் தீர்மானம். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளனர்; அவர்கள் எங்களை குறை கூற தகுதியற்றவர்கள். எங்களுடன் சேர விரும்பும் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைப்போம். அதில் விமர்சிக்க அவர்களுக்கு உரிமை இல்லை” என்றார்.
த.வெ.க. உடன் கூட்டணி பற்றிய கேள்விக்கு அவர், “தேர்தல் நேரத்தில் தான் எந்த கூட்டணி உருவாகும் என்பது தெளிவாகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு கூட கூட்டணியில் மாற்றம் இருக்கலாம்” என கூறினார்.
English Summary
ADMK BJP TVK Alliance EPS